Bible Versions
Bible Books

Genesis 18:12 (NLV) New Life Verson

Versions

TOV   ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
IRVTA   ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: “நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ” என்றாள்.
ERVTA   எனவே, சாராள் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. அவள் தனக்குள், "நானும் முதியவள். என் கணவனும் முதியவர். நான் குழந்தை பெறமுடியாதபடி முதியவளாகிவிட்டேன்" என்றாள்.
RCTA   ஆதலால், அவள் மறைவில் இருந்துகொண்டு புன் சிரிப்புடன்: நானும் கிழவி, என் கணவரும் முதிர்ந்த வயதினர். பின், நான் இன்பத்திற்கு இடம் கொடுப்பதா என்றாள்.
ECTA   எனவே, சாரா தமக்குள் சிரித்து, "நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?" என்றாள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us