Bible Versions
Bible Books

Isaiah 64:2 (NLV) New Life Verson

Versions

TOV   தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்.
IRVTA   தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி, உருக்கும் அக்கினி எரிவதைப்போலவும், நெருப்பு தண்ணீரைப் பொங்கச் செய்வதைப்போலவும், மலைகள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும்.
ERVTA   மலைகள் புதர் எரிவதுபோல எரிந்து வரும். தண்ணீர் நெருப்பில் கொதிப்பதுபோல மலைகள் கொதிக்கும். பிறகு, உமது பகைவர்கள் உம்மைப் பற்றிக் கற்றுக்கொள்வார்கள். அவர்கள் உம்மைப் பார்க்கும்போது அனைத்து நாடுகளும் அச்சத்தால் நடுங்கும்.
RCTA   அவை நெருப்பில் எரியும் விறகைப் போலவும், நெருப்பால் கொதிக்கும் தண்ணீரைப் போலவும் ஆகும். உமது பெயர் உம் பகைவர்களுக்கு விளங்கவும், புறவினத்தார் உம் திருமுன் நடுங்கவும் நீர் வரமாட்டீரா!
ECTA   விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும், தண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும், அவற்றின் நிலைமை இருக்கும். இவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்; வேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us