Versions
TOV அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கையொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
IRVTA அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் நிர்வாகத்தின் கணக்கைக் கொடு, இனி நீ நிர்வாகியாக இருக்கக்கூடாது என்றான்.
ERVTA எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ԅஉன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது என்றான்.
RCTA தலைவன் அவனை அழைத்து, 'என்ன இது? நான் உன்னைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேன். உன் கண்காணிப்புக் கணக்கை ஒப்புவி. நீ இனி என் கண்காணிப்பாளனாய் இருக்க முடியாது' என்றான்.
ECTA தலைவர் அவரைக் கூப்பிட்டு, "உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது" என்று அவரிடம் கூறினார்.