|
|
1. {இயேசு காட்டிக்கொடுக்கப்படுதல்} PS இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீடர்களோடு கெதரோன் என்னும் ஆற்றுக்கு அந்தப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீடர்களும் நுழைந்தார்கள்.
|
1. When Jesus G2424 had spoken G2036 these words G5023 , he went forth G1831 with G4862 his G846 disciples G3101 over G4008 the G3588 brook G5493 Cedron G2748 , where G3699 was G2258 a garden G2779 , into G1519 the which G3739 he G846 entered G1525 , and G2532 his G846 disciples G3101 .
|
2. இயேசு தம்முடைய சீடர்களோடு அடிக்கடி அங்கே சென்றிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
|
2. And G1161 Judas G2455 also G2532 , which betrayed G3860 him G846 , knew G1492 the G3588 place G5117 : for G3754 Jesus G2424 ofttimes G4178 resorted G4863 thither G1563 with G3326 his G846 disciples G3101 .
|
3. யூதாஸ் படைவீரர்கள் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர்கள், பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்ட அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு, தீ பந்தங்களோடும், விளக்குகளோடும் ஆயுதங்களோடும், அந்த இடத்திற்கு வந்தான்.
|
3. Judas G2455 then G3767 , having received G2983 a band G4686 of men and G2532 officers G5257 from G1537 the G3588 chief priests G749 and G2532 Pharisees G5330 , cometh G2064 thither G1563 with G3326 lanterns G5322 and G2532 torches G2985 and G2532 weapons G3696 .
|
4. இயேசு தமக்கு சம்பவிக்கப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.
|
4. Jesus G2424 therefore G3767 , knowing G1492 all things G3956 that should come G2064 upon G1909 him G848 , went forth G1831 , and said G2036 unto them G846 , Whom G5101 seek G2212 ye?
|
5. அவருக்கு அவர்கள் மறுமொழியாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றான்.
|
5. They answered G611 him G846 , Jesus G2424 of Nazareth G3480 . Jesus G2424 saith G3004 unto them G846 , I G1473 am G1510 he. And G1161 Judas G2455 also G2532 , which betrayed G3860 him G846 , stood G2476 with G3326 them G846 .
|
6. நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
|
6. As soon then as G5613 G3767 he had said G2036 unto them G846 , I G1473 am G1510 he, they went G565 backward G1519 G3694 , and G2532 fell G4098 to the ground G5476 .
|
7. அவர் மறுபடியும் அவர்களைப் பார்த்து: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.
|
7. Then G3767 asked G1905 he them G846 again G3825 , Whom G5101 seek G2212 ye? And G1161 they G3588 said G2036 , Jesus G2424 of Nazareth G3480 .
|
8. இயேசு மறுமொழியாக: நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடிவந்திருந்தால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.
|
8. Jesus G2424 answered G611 , I have told G2036 you G5213 that G3754 I G1473 am G1510 he : if G1487 therefore G3767 ye seek G2212 me G1691 , let G863 these G5128 go their way G5217 :
|
9. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்து போகவில்லை என்று அவர் சொல்லிய வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
|
9. That G2443 the G3588 saying G3056 might be fulfilled G4137 , which G3739 he spake G2036 , Of G1537 them G846 which G3739 thou gavest G1325 me G3427 have G3756 I lost G622 none G3762 .
|
10. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்தில் இருந்த வாளை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலதுகாதை வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.
|
10. Then G3767 Simon G4613 Peter G4074 having G2192 a sword G3162 drew G1670 it G846 , and G2532 smote G3817 the G3588 high priest G749 's servant G1401 , and G2532 cut off G609 his G846 right G1188 ear G5621 G1161 . The G3588 servant G1401 's name G3686 was G2258 Malchus G3124 .
|
11. அப்பொழுது இயேசு பேதுருவைப் பார்த்து: உன் வாளை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் குடிக்காதிருப்பேனோ என்றார். PS
|
11. Then G3767 said G2036 Jesus G2424 unto Peter G4074 , Put up G906 thy G4675 sword G3162 into G1519 the G3588 sheath G2336 : the G3588 cup G4221 which G3739 my Father G3962 hath given G1325 me G3427 , shall I not G3364 drink G4095 it G846 ?
|
12. {இயேசு கைதுசெய்யப்படுதல்} PS அப்பொழுது படைவீரர்களும், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனும், யூதர்களுடைய அதிகாரிகளும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,
|
12. Then G3767 the G3588 band G4686 and G2532 the G3588 captain G5506 and G2532 officers G5257 of the G3588 Jews G2453 took G4815 Jesus G2424 , and G2532 bound G1210 him G846 ,
|
13. முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு மாமனாக இருந்தான்.
|
13. And G2532 led him away G520 G846 to G4314 Annas G452 first G4412 ; for G1063 he was G2258 father in law G3995 to Caiaphas G2533 , which G3739 was G2258 the high priest G749 that same G1565 year G1763 .
|
14. மக்களுக்காக ஒரே மனிதன் மரிக்கிறது நலமாக இருக்கும் என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. PS
|
14. Now G1161 Caiaphas G2533 was G2258 he G3588 , which gave counsel G4823 to the G3588 Jews G2453 , that G3754 it was expedient G4851 that one G1520 man G444 should die G622 for G5228 the G3588 people G2992 .
|
15. {பேதுருவின் முதலாம் மறுதலிப்பு} PS சீமோன்பேதுருவும் வேறொரு சீடனும் இயேசுவிற்குப் பின்னே சென்றார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்ததினால் இயேசுவுடன் பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் நுழைந்தான்.
|
15. And G1161 Simon G4613 Peter G4074 followed G190 Jesus G2424 , and G2532 so did another G243 disciple G3101 G1161 : that G1565 disciple G3101 was G2258 known G1110 unto the G3588 high priest G749 , and G2532 went in with G4897 Jesus G2424 into G1519 the G3588 palace G833 of the G3588 high priest G749 .
|
16. பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்த மற்றச் சீடன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான்.
|
16. But G1161 Peter G4074 stood G2476 at G4314 the G3588 door G2374 without G1854 . Then G3767 went out G1831 that other G243 disciple G3101 , which G3739 was G2258 known G1110 unto the G3588 high priest G749 , and G2532 spake G2036 unto her that kept the door G2377 , and G2532 brought in G1521 Peter G4074 .
|
17. அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான்.
|
17. Then G3767 saith G3004 the G3588 damsel G3814 that kept the door G2377 unto Peter G4074 , Art G1488 not G3361 thou G4771 also G2532 one of G1537 this G5127 man G444 's disciples G3101 ? He G1565 saith G3004 , I am G1510 not G3756 .
|
18. குளிர்காலமாக இருந்ததினாலே அதிகாரிகளும் காவலர்களும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களோடு பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். PS
|
18. And G1161 the G3588 servants G1401 and G2532 officers G5257 stood G2476 there , who had made G4160 a fire of coals G439 ; for G3754 it was G2258 cold G5592 : and G2532 they warmed G2328 themselves: and G1161 Peter G4074 stood G2258 G2476 with G3326 them G846 , and G2532 warmed G2328 himself.
|
19. {இயேசுவிடம் பிரதான ஆசாரியனின் கேள்விகள்} PS பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
|
19. The G3588 high priest G749 then G3767 asked G2065 Jesus G2424 of G4012 his G846 disciples G3101 , and G2532 of G4012 his G846 doctrine G1322 .
|
20. இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் வெளியரங்கமாக மக்களுடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்கள் எல்லோரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் போதித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.
|
20. Jesus G2424 answered G611 him G846 , I G1473 spake G2980 openly G3954 to the G3588 world G2889 ; I G1473 ever G3842 taught G1321 in G1722 the G3588 synagogue G4864 , and G2532 in G1722 the G3588 temple G2411 , whither G3699 the G3588 Jews G2453 always G3842 resort G4905 ; and G2532 in G1722 secret G2927 have I said G2980 nothing G3752 .
|
21. நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார்.
|
21. Why G5101 askest G1905 thou me G1905 ? ask G1905 them which heard G191 me, what G5101 I have said G2980 unto them G846 : behold G2396 , they G3778 know G1492 what G3739 I G1473 said G2036 .
|
22. இப்படி அவர் சொன்னபொழுது, அருகில் நின்ற காவலர்களில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
|
22. And G1161 when he G846 had thus G5023 spoken G2036 , one G1520 of the G3588 officers G5257 which stood by G3936 struck Jesus with the palm of his hand G1325 G2424 G4475 , saying G2036 , Answerest G611 thou the G3588 high priest G749 so G3779 ?
|
23. இயேசு அவனைப் பார்த்து: நான் பேசியது, தவறாக இருந்தால் எது தவறு என்று காட்டு; நான் பேசியது சரியானால், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
|
23. Jesus G2424 answered G611 him G846 , If G1487 I have spoken G2980 evil G2560 , bear witness G3140 of G4012 the G3588 evil G2556 : but G1161 if G1487 well G2573 , why G5101 smitest G1194 thou me G3165 ?
|
24. பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டபட்டவராக அனுப்பினான். PS
|
24. Now Annas G452 had sent G649 him G846 bound G1210 unto G4314 Caiaphas G2533 the G3588 high priest G749 .
|
25. {பேதுருவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுதலிப்பு} PS சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனைப் பார்த்து: நீயும் அவனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் இல்லை என்று மறுதலித்தான்.
|
25. And Simon G4613 Peter G4074 stood G2258 G2476 and G2532 warmed G2328 himself . They said G2036 therefore G3767 unto him G846 , Art G1488 not G3361 thou G4771 also G2532 one of G1537 his G846 disciples G3101 ? He G1565 denied G720 it, and G2532 said G2036 , I am G1510 not G3756 .
|
26. பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான்.
|
26. One G1520 of G1537 the G3588 servants G1401 of the G3588 high priest G749 , being G5607 his kinsman G4773 whose G3739 ear G5621 Peter G4074 cut off G609 , saith G3004 , Did not G3756 I G1473 see G1492 thee G4571 in G1722 the G3588 garden G2779 with G3326 him G846 ?
|
27. அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவியது. PS
|
27. Peter G4074 then G3767 denied G720 again G3825 : and G2532 immediately G2112 the cock G220 crew G5455 .
|
28. {பிலாத்துவிற்கு முன்பாக இயேசு} PS அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாக இருந்தது. தீட்டுப்படாமல் பஸ்கா உணவை உண்பதற்காக அவர்கள் தேசாதிபதியின் அரண்மனைக்குள் நுழையாமலிருந்தார்கள்.
|
28. Then G3767 led G71 they Jesus G2424 from G575 Caiaphas G2533 unto G1519 the G3588 hall of judgment G4232 : and G1161 it was G2258 early G4405 ; and G2532 they G846 themselves went G1525 not G3756 into G1519 the G3588 judgment hall G4232 , lest G3363 they should be defiled G3392 ; but G235 that G2443 they might eat G5315 the G3588 passover G3957 .
|
29. ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனிதன்மேல் என்ன குற்றஞ்சுமத்துகிறீர்கள் என்றான்.
|
29. Pilate G4091 then G3767 went out G1831 unto G4314 them G846 , and G2532 said G2036 , What G5101 accusation G2724 bring G5342 ye against G2596 this G5127 man G444 ?
|
30. அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: இவன் குற்றவாளியாக இல்லாவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.
|
30. They answered G611 and G2532 said G2036 unto him G846 , If G1487 he G3778 were G2258 not G3361 a malefactor G2555 , we would not G3756 have G302 delivered him up G3860 G846 unto thee G4671 .
|
31. அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து: இவனை நீங்களே கொண்டுபோய், உங்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி தீர்ப்பு செய்யுங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.
|
31. Then G3767 said G2036 Pilate G4091 unto them G846 , Take G2983 ye G5210 him G846 , and G2532 judge G2919 him G846 according G2596 to your G5216 law G3551 . The G3588 Jews G2453 therefore G3767 said G2036 unto him G846 , It is not lawful G1832 G3756 for us G2254 to put any man to death G615 G3762 :
|
32. தாம் எந்தவிதமாக மரிக்கப்போகிறார் என்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
|
32. That G2443 the G3588 saying G3056 of Jesus G2424 might be fulfilled G4137 , which G3739 he spake G2036 , signifying G4591 what G4169 death G2288 he should G3195 die G599 .
|
33. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான்.
|
33. Then G3767 Pilate G4091 entered G1525 into G1519 the G3588 judgment hall G4232 again G3825 , and G2532 called G5455 Jesus G2424 , and G2532 said G2036 unto him G846 , Art G1488 thou G4771 the G3588 King G935 of the G3588 Jews G2453 ?
|
34. இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
|
34. Jesus G2424 answered G611 him G846 , Sayest G3004 thou G4771 this thing G5124 of G575 thyself G1438 , or G2228 did others G243 tell G2036 it thee G4671 of G4012 me G1700 ?
|
35. பிலாத்து மறுமொழியாக: நான் யூதனா? உன் மக்களும் பிரதான ஆசாரியர்களும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
|
35. Pilate G4091 answered G611 G3385 , Am G1510 I G1473 a Jew G2453 ? Thine own G4674 nation G1484 and G2532 the G3588 chief priests G749 have delivered G3860 thee G4571 unto me G1698 : what G5101 hast thou done G4160 ?
|
36. இயேசு மறுமொழியாக: என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதானால் நான் யூதர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் வேலைக்காரர்கள் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இந்த இடத்திற்குரியதல்ல என்றார்.
|
36. Jesus G2424 answered G611 , My G1699 kingdom G932 is G2076 not G3756 of G1537 this G5127 world G2889 : if G1487 my G1699 kingdom G932 were G2258 of G1537 this G5127 world G2889 , then would my G1699 servants G5257 fight G75 G302 , that G2443 I should not G3361 be delivered G3860 to the G3588 Jews G2453 : but G1161 now G3568 is G2076 my G1699 kingdom G932 not G3756 from hence G1782 .
|
37. அப்பொழுது பிலாத்து அவரைப் பார்த்து: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு மறுமொழியாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்கவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
|
37. Pilate G4091 therefore G3767 said G2036 unto him G846 , Art G1488 thou G4771 a king G935 then G3766 ? Jesus G2424 answered G611 , Thou G4771 sayest G3004 that G3754 I G1473 am G1510 a king G935 . To G1519 this end G5124 was I G1473 born G1080 , and G2532 for G1519 this cause G5124 came G2064 I into G1519 the G3588 world G2889 , that G2443 I should bear witness G3140 unto the G3588 truth G225 . Every one G3956 that is G5607 of G1537 the G3588 truth G225 heareth G191 my G3450 voice G5456 .
|
38. அதற்குப் பிலாத்து: சத்தியம் என்றால் என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணவில்லை.
|
38. Pilate G4091 saith G3004 unto him G846 , What G5101 is G2076 truth G225 ? And G2532 when he had said G2036 this G5124 , he went out G1831 again G3825 unto G4314 the G3588 Jews G2453 , and G2532 saith G3004 unto them G846 , I G1473 find G2147 in G1722 him G846 no G3762 fault G156 at all.
|
39. பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான்.
|
39. But G1161 ye G5213 have G2076 a custom G4914 , that G2443 I should release G630 unto you G5213 one G1520 at G1722 the G3588 passover G3957 : will G1014 ye therefore G3767 that I release G630 unto you G5213 the G3588 King G935 of the G3588 Jews G2453 ?
|
40. அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான். PE
|
40. Then G3767 cried G2905 they all G3956 again G3825 , saying G3004 , Not G3361 this man G5126 , but G235 Barabbas G912 . Now G1161 Barabbas G912 was G2258 a robber G3027 .
|