Bible Versions
Bible Books

2 Kings 14:11 (NLV) New Life Verson

Versions

TOV   ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,
IRVTA   ஆனாலும் அமத்சியா கேட்காமல்போனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் திறமையைப் பார்க்கிறபோது,
ERVTA   ஆனாலும் அமத்சியா காதுகொடுத்து கேட்கவில்லை. ஆகையால் இஸ்ரவேலின் அரசனாகிய யோவாஸ் வந்தான். யூதாவிலுள்ள பெத்ஷிமேஸ் என்னும் இடத்தில் அவனும் யூதாவின் அரசனுமான அமத்சியாவும் மோதிக்கொண்டனர்.
RCTA   அதற்கு அமாசியாசு செவிகொடுக்கவில்லை. எனவே இஸ்ராயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். இவனும் யூதா அரசன் அமாசியாசும் யூதாவின் நகர் பெத்சாமேசின் அருகே ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
ECTA   அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் பறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us