Bible Versions
Bible Books

2 Kings 14:28 (NLV) New Life Verson

Versions

TOV   யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
IRVTA   யெரொபெயாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் போர்செய்து, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ERVTA   யெரொபெயாம் செய்த மற்ற அருஞ் செயல்களும் அவரது வலிமையும் ‘இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் யெரொபெயாம் தமஸ்குவையையும் ஆமாத்தையும் போரிட்டு இஸ்ரவேலோடு சேர்த்துக் கொண்டதும் உள்ளது. (இந்நகரங்கள் யூதாவோடு சேர்ந்திருந்தது)
RCTA   எரோபோவாமின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், போரில் அவன் காட்டிய வீரமும், யூதா நாட்டுடன் இருந்த தமாஸ்து, ஏமாத் நகர்களையும் இஸ்ராயேல் நாட்டுடன் மீண்டும் இணைத்துக் கொண்ட விதமும் இஸ்ராயேல் அரசர்களது நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
ECTA   எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை-ஆகியன பற்றி "இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்" எழுதப்பட்டுள்ளன அல்லவா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us