Bible Versions
Bible Books

Isaiah 66:4 (NLV) New Life Verson

Versions

TOV   நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
IRVTA   நான் கூப்பிட்டும் மறுமொழி கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினால், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரச்செய்வேன்.
ERVTA   எனவே, நான் அவர்களது தந்திரங்களையே பயன்படுத்த முடிவு செய்தேன். அதாவது அவர்கள் எதைக்கண்டு அதிகமாகப் பயப்படுகிறார்களோ, அதனாலேயே அவர்களைத் தண்டிப்பேன். நான் அந்த ஜனங்களை அழைத்தேன். ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை. நான் அவர்களோடு பேசினேன். ஆனால், அவர்கள் என்னைக் கேட்கவில்லை. எனவே, நான் அதனையே அவர்களுக்குச் செய்வேன். நான் விரும்பாதவற்றையே அவர்கள் செய்யத் தேர்ந்தெடுத்தனர்."
RCTA   ஆதலால் நாம் அவர்களுக்குத் துன்பங்களைத் தருவோம், அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மேல் வரச் செய்வோம்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், அவர்களுள் பதில் தருபவன் ஒருவனுமில்லை; நாம் பேசினோம், அவர்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தார்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றில் அவர்கள் இன்பம் கண்டார்கள்."
ECTA   நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்; அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மீது வரச்செய்வேன்; ஏனெனில், நான் அழைத்தபோது எவரும் பதில் தரவில்லை; நான் பேசியபோது அவர்கள் செவி கொடுக்கவில்லை; என் கண்முன்னே தீயவற்றைச் செய்தார்கள்; நான் விருப்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us