Bible Versions
Bible Books

1 Samuel 28:7 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
IRVTA   அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள்.
ERVTA   கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், "குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்" என்றான். அவனது அதிகாரிகளோ, "எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்" என்றனர்.
RCTA   அப்பொழுது சவுல் தம் ஊழியர்களை நோக்கி, "நீங்கள் பித்தோனீசு என்னும் குறிகாரிகளில் ஒருத்தியைத் தேடிப்பாருங்கள். நான் அவளிடம் போய் ஆலோசனை கேட்பேன்" என்றார். அவர் ஊழியர்கள் அவரை நோக்கி, "எந்தோரில் அவ்விதக் குறிகாரி ஒருத்தி இருக்கிறாள்" என்று சொன்னார்கள்.
ECTA   பின்பு சவுல் தம் பணியாளரிடம் "குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடி என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும் "என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, "இதோ ஏன்தோரில் குறி சொல்பவள் ஒருத்தி இருக்கிறாள் "என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us