Bible Versions
Bible Books

1 Corinthians 14:19 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
IRVTA   அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதைவிட, மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடு ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாக இருக்கும்.
ERVTA   ஆனால், சபையின் கூட்டங்களில் நான் புரியக் கூடிய மொழியில் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே, புரியாத மொழியில் ஆயிரம் வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும் விரும்புவேன். நான் பிறருக்குப் போதிக்கும்படியாக, எனது புரிந்து கொள்ளும் தன்மையோடு பேசுவதையே தேர்ந்து கொள்கிறேன்.
RCTA   ஆனாலும் நான் சபையிலே பேசினால் பரவசப் பேச்சில் பத்தாயிரம் சொற்கள் பேசுவதைவிட , மற்றவர்களுக்குக் கற்பிக்க அறிவுத் தெளிவோடு நாலைந்து சொல் மட்டுமே பேசுவதை விரும்புவேன்
ECTA   ஆயினும் நான் திருச்சபையில் பரவச நிலையில் பல்லாயிரம் சொற்களைப் பேசுவதைவிட மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக நாலைந்து சொற்களை அறிவோடு சொல்வதையே விரும்புகிறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us