Versions
TOV அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
IRVTA அப்பொழுது அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடம் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என்னுடைய சுண்டுவிரல் என்னுடைய தகப்பனுடைய இடுப்பைவிட பருமனாக இருக்கும்.
ERVTA அரசனிடம் இளைய நண்பர்களோ, "சிலர் உன்னிடம் வந்து, ‘உங்கள் தந்தை கடினமான வேலையைக் கொடுத்தார். நீங்கள் எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நீ அவர்களிடம், ‘என் சிறிய விரல் தந்தையின் முழு சரீரத்தைவிட பல மிக்கது என்று சொல்லவேண்டும்.
RCTA அப்போது அவனோடு வளர்ந்து வந்த வாலிபர் அவனை நோக்கி, "உம் தந்தை கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். நீர் எங்கள் துன்பம் துடைத்தருளும்' என்று உம்மிடம் சொன்ன இம்மக்களுக்குச் சொல்ல வேண்டியதாவது: 'என் சுண்டு விரல் என் தந்தையின் உடலை விடப் பருமனாயிருக்கிறது.
ECTA அவனோடு வளர்ந்த அந்த இளைஞர் அவனை நோக்கி, ""உம் தந்தை எங்கள் மீதுள்ள நுகத்தைப் பளுவாக்கினார். நீர் அதன் பளுவைக் குறைத்தருளும் என்று அம்மக்கள் உம்மிடம் வேண்டினார்கள் அல்லவா? அவர்களுக்கு இந்தப் பதில் கொடும்; "என் சுண்டு விரல் என் தந்தையின் இடுப்பை விடப் பெரியது;