Versions
TOV அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்.
IRVTA அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் * வெண்கல சர்ப்பம் என்று பெயரிட்டான்.
ERVTA எசேக்கியா மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயத்தை அழித்தான். அவர்களின் ஞாபகக் கற்களையும் கூட உடைத்தான். அசெரியாவின் உருவத் தூண்களை வெட்டிப்போட்டான். மோசே செய்த வெண்கல பாம்பை உடைத்துப் போட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அதற்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். இவ்வெண்கலப் பாம்பானது ‘நிகுஸ்தான்’ என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அன்றுவரை இஸ்ரவேலர்கள் இந்த வெண்கலப் பாம்பை தொழுதுவந்தனர்.
RCTA (விக்கிரக ஆராதனைக்காக அமைக்கப்பட்டிருந்த) மேடுகளை அவன் அழித்து, சிலைகளை உடைத்து, அவற்றிற்கென அமைக்கப்படிருந்த சோலைகளையும் அழித்து, மோயீசனால் செய்து வைக்கப்பட்ட பித்தளைப் பாம்பையும் உடைத்தெறிந்தான். ஏனெனில், இஸ்ராயேல் மக்கள் அன்று வரை அதற்குத் தூப வழிபாடு செய்து வந்தனர். அது நோயஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது.
ECTA அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினர். மோசேயால் செய்து வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச் சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது "நெகுஸ்தான்" என்று அழைக்கப்பட்டு வந்தது.