Bible Versions
Bible Books

Colossians 2:23 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
IRVTA   இப்படிப்பட்டப் போதனைகள் சுயவிருப்பமான ஆராதனையையும், போலியான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானம் என்கிற பெயர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பாதுகாப்பதற்கேயன்றி வேறு எதற்கும் உபயோகப்படாது. PE
ERVTA   இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது.
RCTA   மனிதர்களே வகுத்துக்கொண்ட வழிபாடு, போலித் தாழ்ச்சி, உடல் ஒறுத்தல் முதலியவற்றைக் கொண்டுள்ளதால் இப்படிப்பினைகள் ஞானம்போல் தோன்றலாம். ஆனால், அவற்றிற்கு மதிப்பேதும் இல்லை. இச்சைகளைத் தீர்க்கத்தான் அவை பயன்படும்.
ECTA   மனிதர் தாங்களாகவே வகுத்துக் கொண்ட வழிபாடுகள், போலித் தாழ்மை, உடல் ஒறுத்தல் ஆகிய போதனைகள் ஞானமுள்ளவைபோல் தோன்றுகின்றன. ஆனால் அவை இச்சையைத் தணிப்பதற்குப் பயன்படா.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us