Bible Versions
Bible Books

Ecclesiastes 8:17 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
IRVTA   தேவன் செய்யும் எல்லா செயல்களையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செய்கையை மனிதன் கண்டுபிடிக்கமுடியாதென்று கண்டேன். அதை அறியும்படி மனிதன் முயற்சித்தாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான். PE
ERVTA   நானும் தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன். உலகில் தேவன் செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆனால் அவனால் முடியாது. ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப் புரிந்துகொண்டதாகக் கூறலாம். ஆனால் அதுவும் உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது.
RCTA   இறுதியாக, சூரியன் முகத்தே கடவுள் செய்து வருகிற செயல்களின் காரணங்களை மனிதன் கண்டுபிடித்தல் இயலாதென்றும், மனிதன் அதைக் கண்டுபிடிக்க எவ்வளவுக்கு முயல்வானோ அவ்வளவுக்குக் கண்டுபிடிக்கா திருக்கிறான் என்றும் கண்டேன். அது எனக்குத் தெரியும் என்று ஞானி சாதித்தாலும், அவனும் கண்டு பிடிக்க மாட்டானென்று கண்டேன்.
ECTA   மனிதர் எத்துணை முயன்றாலும் அவரால் அதைக் கண்டுகொள்ள இயலாது. ஞானமுள்ளவர்கள் அது தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கும் அது தெரியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us