Bible Versions
Bible Books

Ruth 1:2 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்து விட்டார்கள்.
IRVTA   அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு என் தேவன் தான் என் இராஜா , அவனுடைய மனைவியின் பெயர் நகோமி § இனிமையானவள் , அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன் * பலவீனமானவன் , மற்றொருவன் பெயர் கிலியோன் தோல்வி ; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
ERVTA   அவனது மனைவியின் பெயர் நகோமி. அவனது இரண்டு மகன்களின் பெயர்களும் மக்லோன், கிலியோன் என்பவை ஆகும். இவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமில் எப்பிராத்தியர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இக்குடும்பமானது மலை நாடான மோவாபுக்கு சென்று அங்கேயே தங்கியது.
RCTA   அவன் பெயர் எலிமெலேக். அவன் மனைவியின் பெயர் நோயேமி. அவர்களுடைய இரு புதல்வர்களில் ஒருவன் பெயர் மகலோன், மற்றொருவன் பெயர் கேளியோன். அவர்கள் யூதா நாட்டுப் பெத்லகேம் என்னும் எப்ராத்தா ஊரிலிருந்து மோவாப் நாட்டிற்குப் போய் அங்கே குடியிருந்தனர்.
ECTA   அவர் பெயர் எலிமலேக்கு; அவர் மனைவி பெயர் நகோமி. மைந்தர் இருவரின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பன. அவர்கள் யூதாவிலிருந்த பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்துக் குடியினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us