Bible Versions
Bible Books

Ezekiel 46:14 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொறுபங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.
IRVTA   அதினோடு காலைதோறும் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறிலொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படி ஒருபடி எண்ணெயிலே மூன்றிலொரு பங்கையும் படைக்கவேண்டும்; இது அன்றாடம் யெகோவாவுக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான உணவுபலி.
ERVTA   அதோடு ஒவ்வொரு நாள் காலையிலும் நீ ஆட்டுக் குட்டியோடு தானியக் காணிக்கையாக ஒரு மரக்கால் மாவிலே 1/6 பங்கு (14 கோப்பை) ஒரு படி எண்ணெயிலே 1/3 பங்கு (1/3 கேலன்) எண்ணெயை மாவைப் பிசைவதற்காகவும் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்குத் தினந்தோறும் கொடுக்க வேண்டிய தானியக் காணிக்கையாகும்.
RCTA   இவ்வாட்டுக் குட்டியுடன் நாடோறும் காலையில் ஒரு மரக்கால் மாவில் ஆறிலொரு பங்கையும், மாவோடு பிசைய ஒரு படி எண்ணெயில் மூன்றிலொரு பங்கையும் உணவுப் பலியாகப் படைக்கவேண்டும்; இது நாடோறும் ஆண்டவருக்கு என்றென்றைக்கும் ஒப்புக்கொடுக்க வேண்டிய பலியாகும்.
ECTA   ஆட்டுக்குட்டியுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் தானியப் படையல் செய்தல் வேண்டும். அது ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பகுதியாகவும், கூடவே மாவைப் பிசைய ஒரு கலயம் அளவு எண்ணெயில் மூன்றிலொரு பகுதியுமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்குத் தானியப் படையல் செய்தல் என்றென்றும் நடைபெற வேண்டிய முறைமையாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us