Versions
TOV அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.
IRVTA அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார்.
ERVTA வேதவாக்கியம் சொல்கிறது, மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள். ஏசாயா 53:12 இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றார்.
RCTA ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 'நெறிகெட்டவர்களோடு ஒன்றாக எண்ணப்பட்டார்' என்று எழுதியுள்ளது என்மட்டில் நிறைவேறவேண்டும். என்னைப் பற்றியதெல்லாம் நிறைவுபெறுகின்றது" என்றார்.
ECTA ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; "கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்" ;;என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன" என்றார்.