Bible Versions
Bible Books

Esther 8:11 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரே நாளிலே,
IRVTA   அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் தேதியாகிய அந்த ஒரே நாளிலே,
ERVTA   அரசனது கட்டளைகளாகக் கடிதங்களில் சொல்லப்பட்டவை இதுதான்: ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள யூதர்கள் அனைவரும் கூடி சேர்ந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்ற உரிமையுடையவர்கள். அவர்களுக்கு தங்களையோ, தங்கள் பெண்களையோ, பிள்ளைகளையோ தாக்கும் எதிரிகளைத் தாக்கவோ, கொல்லவோ, அழிக்கவோ உரிமை உண்டு. யூதர்களுக்கு தங்கள் பகைவர்களின் சொத்தை அபகரிக்கவோ, அழிக்கவோ உரிமை உண்டு.
RCTA   மேலும் தூதுவருக்கு அரசன் ஒரு கட்டளை கொடுத்திருந்தான். "நீங்கள் யூதர்கள் வாழ்ந்து வரும் ஒவ்வொரு நகருக்கும் சென்று அவர்கள் ஒன்று சேர்ந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும்படியும், தங்கள் பகைவரையும் அவர்களில் மனைவி, மக்கள் யாவரையும் கொன்று போட்டு அவர்களுடைய வீடுகளை அழித்துக் கொள்ளையிடும் படியும் தயாராயிருக்கச் சொல்ல வேண்டும்" என்பதுவே அக்கட்டளை.
ECTA   ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும், அவற்றின் உடைமைகளைக் கொள்ளையிடவும், தேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us