Bible Versions
Bible Books

Esther 8:8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
IRVTA   இப்போதும் உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் ராஜாவின் பெயரால் யூதர்களுக்காக எழுதி ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடுங்கள்; ராஜாவின் பெயரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தால் முத்திரை போடப்பட்டதைச் செல்லாமல் போகச்செய்ய ஒருவராலும் முடியாது என்றான்.
ERVTA   இப்பொழுது அரசனது அதிகாரப்படி இன்னொரு கட்டளையை எழுதுங்கள். யூதர்களுக்கு உதவ எது சிறப்பான வழியாகத் தோன்றுகிறதோ அப்படி எழுதி, அந்த கட்டளையை அரசனது சிறப்பு மோதிரத்தில் முத்திரையிடு. அரசனது அதிகாரத்துடன் எழுதப்பட்டு அவனது சிறப்பு மோதிரம் முத்திரை பொறிக்கப்பட்ட எந்தக் கடிதமும் ரத்து செய்யப்படக் கூடாது" என்றான்.
RCTA   எனவே, நீங்கள் உங்கள் விருப்பப்படி என் பெயரால் யூதர்களுக்குக் கட்டளைக் கடிதங்கள் எழுதி அவற்றிலே என் மோதிர முத்திரையை இடுங்கள்" என்றான். ஏனென்றால் வழக்கப்படி அரசன் பெயரால் எழுதப்பட்டு அவனுடைய மோதிர முத்திரை இடப்பட்ட பத்திரத்தைச் செயலற்றதாக்க யாராலும் முடியாது.
ECTA   மன்னரின் பெயரால் எழுதப்பட்டு, அவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற "எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால் உங்கள் பார்வையில் நலமெனத்தோன்றும் அனைத்தையும் மன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி, மன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள் என்று கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us