|
|
1. {பெத்தானியாவில் இயேசு} PS பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்)
|
1. Then G3767 Jesus G2424 six G1803 days G2250 before G4253 the G3588 passover G3957 came G2064 to G1519 Bethany G963 , where G3699 Lazarus G2976 was G2258 which had been dead G2348 , whom G3739 he raised G1453 from G1537 the dead G3498 .
|
2. பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர்.
|
2. G3767 There G1563 they made G4160 him G4160 a supper G1173 ; and G2532 Martha G3136 served G1247 : but G1161 Lazarus G2976 was G2258 one G1520 of them that sat at the table with G4873 him G846 .
|
3. மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது. PEPS
|
3. Then G3767 took G2983 Mary G3137 a pound G3046 of ointment G3464 of spikenard G4101 G3487 , very costly G4186 , and anointed G218 the G3588 feet G4228 of Jesus G2424 , and G2532 wiped G1591 his G846 feet G4228 with her G848 hair G2359 : and G1161 the G3588 house G3614 was filled G4137 with G1537 the G3588 odor G3744 of the G3588 ointment G3464 .
|
4. யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை.
|
4. Then G3767 saith G3004 one G1520 of G1537 his G846 disciples G3101 , Judas G2455 Iscariot G2469 , Simon G4613 's son, which should G3195 betray G3860 him G846 ,
|
5. அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான்.
|
5. Why G1302 was not G3756 this G5124 ointment G3464 sold G4097 for three hundred G5145 pence G1220 , and G2532 given G1325 to the poor G4434 ?
|
6. ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான். PEPS
|
6. G1161 This G5124 he said G2036 , not G3756 that G3754 he G846 cared G3199 for G4012 the G3588 poor G4434 ; but G235 because G3754 he was G2258 a thief G2812 , and G2532 had G2192 the G3588 bag G1101 , and G2532 bare G941 what was put G906 therein.
|
7. இயேசு அவனிடம், “அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள்.
|
7. Then G3767 said G2036 Jesus G2424 , Let her alone G863 G846 : against G1519 the G3588 day G2250 of my G3450 burying G1780 hath she kept G5083 this G846 .
|
8. ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்பதில்லை” என்றார். PS
|
8. For G1063 the G3588 poor G4434 always G3842 ye have G2192 with G3326 you G1438 ; but G1161 me G1691 ye have G2192 not G3756 always G3842 .
|
9. {லாசருவுக்கு எதிரான சதி} PS யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன்.
|
9. Much G4183 people G3793 of G1537 the G3588 Jews G2453 therefore G3767 knew G1097 that G3754 he was G2076 there G1563 : and G2532 they came G2064 not G3756 for Jesus' sake G1223 G2424 only G3440 , but G235 that G2443 they might see G1492 Lazarus G2976 also G2532 , whom G3739 he had raised G1453 from G1537 the dead G3498 .
|
10. ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள்.
|
10. But G1161 the G3588 chief priests G749 consulted G1011 that G2443 they might put Lazarus also to death G615 G2976 G2532 ;
|
11. ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர். (மத். 21:1–11; மாற். 11:1–11; லூ. 19:28–40) PEPS
|
11. Because G3754 that by reason of G1223 him G846 many G4183 of the G3588 Jews G2453 went away G5217 , and G2532 believed G4100 on G1519 Jesus G2424 .
|
12. {எருசலேமில் இயேசு} PS மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள்.
|
12. On the G3588 next day G1887 much G4183 people G3793 that were come G2064 to G1519 the G3588 feast G1859 , when they heard G191 that G3754 Jesus G2424 was coming G2064 to G1519 Jerusalem G2414 ,
|
13. அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்: “ ‘அவரைப் புகழ்வோம்! வருக!’ ‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ சங்கீதம் 118:25-26 “தேவன் இஸ்ரவேலின் இராஜாவை ஆசீர்வதிப்பாராக!” என்று முழங்கினர். PS
|
13. Took G2983 branches G902 of palm trees G5404 , and G2532 went forth G1831 to G1519 meet G5222 him G846 , and G2532 cried G2896 , Hosanna G5614 : Blessed G2127 is the G3588 King G935 of Israel G2474 that cometh G2064 in G1722 the name G3686 of the Lord G2962 .
|
14. இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார்.
|
14. And G1161 Jesus G2424 , when he had found G2147 a young ass G3678 , sat G2523 thereon G1909 G846 ; as G2531 it is G2076 written G1125 ,
|
15. “சீயோன் *சீயோன் எழுத்தின்படியான பொருள் சீயோன் மகளே. எருசலேம் என்று பொருள். நகரமே அஞ்சவேண்டாம். பார். உன் அரசர் வந்துகொண்டிருக்கிறார். அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார்” சகரியா 9:9 என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர். PEPS
|
15. Fear G5399 not G3361 , daughter G2364 of Zion G4622 ; behold G2400 , thy G4675 King G935 cometh G2064 , sitting G2521 on G1909 an ass G3688 's colt G4454 .
|
16. இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்துகொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவுகூர்ந்தனர். PS
|
16. G1161 These things G5023 understood G1097 not G3756 his G846 disciples G3101 at the first G4412 : but G235 when G3753 Jesus G2424 was glorified G1392 , then G5119 remembered G3415 they that G3754 these things G5023 were G2258 written G1125 of G1909 him G846 , and G2532 that they had done G4160 these things G5023 unto him G846 .
|
17. {இயேசுவைப்பற்றி மக்கள் பேசுதல்} PS மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி “கல்லறையை விட்டு வெளியே வா” என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப்பற்றிக் கூறினர்.
|
17. The G3588 people G3793 therefore G3767 that was G5607 with G3326 him G846 when G3753 he called G5455 Lazarus G2976 out of G1537 his grave G3419 , and G2532 raised G1453 him G846 from G1537 the dead G3498 , bare record G3140 .
|
18. இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர்.
|
18. For this cause G1223 G5124 the G3588 people G3793 also G2532 met G5221 him G846 , for G3754 that they heard G191 that he G846 had done G4160 this G5124 miracle G4592 .
|
19. அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், “பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின்தொடர்கிறார்கள்” என்று பேசிக்கொண்டனர். PS
|
19. The G3588 Pharisees G5330 therefore G3767 said G2036 among G4314 themselves G1438 , Perceive G2334 ye how G3754 ye prevail G5623 G3756 nothing G3762 ? behold G2396 , the G3588 world G2889 is gone G565 after G3694 him G846 .
|
20. {ஜீவன்} PS அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர்.
|
20. And G1161 there were G2258 certain G5100 Greeks G1672 among G1537 them that came up G305 to G2443 worship G4352 at G1722 the G3588 feast G1859 :
|
21. இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) “ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம்” என்றனர்.
|
21. The same G3778 came G4334 therefore G3767 to Philip G5376 , which G3588 was of G575 Bethsaida G966 of Galilee G1056 , and G2532 desired G2065 him G846 , saying G3004 , Sir G2962 , we would G2309 see G1492 Jesus G2424 .
|
22. பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள். PEPS
|
22. Philip G5376 cometh G2064 and G2532 telleth G3004 Andrew G406 : and G2532 again G3825 Andrew G406 and G2532 Philip G5376 tell G3004 Jesus G2424 .
|
23. இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது.
|
23. And G1161 Jesus G2424 answered G611 them G846 , saying G3004 , The G3588 hour G5610 is come G2064 , that G2443 the G3588 Son G5207 of man G444 should be glorified G1392 .
|
24. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும்.
|
24. Verily G281 , verily G281 , I say G3004 unto you G5213 , Except G3362 a corn G2848 of wheat G4621 fall G4098 into G1519 the G3588 ground G1093 and die G599 , it G846 abideth G3306 alone G3441 : but G1161 if G1437 it die G599 , it bringeth forth G5342 much G4183 fruit G2590 .
|
25. தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான்.
|
25. He that loveth G5368 his G848 life G5590 shall lose G622 it G846 ; and G2532 he that hateth G3404 his G848 life G5590 in G1722 this G5129 world G2889 shall keep G5442 it G846 unto G1519 life G2222 eternal G166 .
|
26. எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.” PS
|
26. If G1437 any man G5100 serve G1247 me G1698 , let him follow G190 me G1698 ; and G2532 where G3699 I G1473 am G1510 , there G1563 shall also G2532 my G1699 servant G1249 be G2071 G2532 : if G1437 any man G5100 serve G1247 me G1698 , him G846 will my Father G3962 honor G5091 .
|
27. {இயேசு தன் மரணத்தைப்பற்றிப் பேசியது} PS “நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ‘பிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன்.
|
27. Now G3568 is my G3450 soul G5590 troubled G5015 ; and G2532 what G5101 shall I say G2036 ? Father G3962 , save G4982 me G3165 from G1537 this G5026 hour G5610 : but G235 for this cause G1223 G5124 came G2064 I unto G1519 this G5026 hour G5610 .
|
28. பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக!” என்றார். PEPS அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, “நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன்” என்றது. PEPS
|
28. Father G3962 , glorify G1392 thy G4675 name. Then G3767 G3686 G3767 came G2064 there a voice G5456 from G1537 heaven G3772 , saying, I have both G2532 glorified G1392 it, and G2532 will glorify G1392 it again G3825 .
|
29. அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர். PEPS வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர். PEPS
|
29. The G3588 people G3793 therefore G3767 , that stood by G2476 , and G2532 heard G191 it, said G3004 that it thundered G1096 G1027 : others G243 said G3004 , An angel G32 spake G2980 to him G846 .
|
30. மக்களிடம் இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக.
|
30. Jesus G2424 answered G611 and G2532 said G2036 , This G3778 voice G5456 came G1096 not G3756 because G1223 of me G1691 , but G235 for your sakes G1223 G5209 .
|
31. உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டுகொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான்.
|
31. Now G3568 is G2076 the judgment G2920 of this G5127 world G2889 : now G3568 shall the G3588 prince G758 of this G5127 world G2889 be cast G1544 out G1854 .
|
32. நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக்கொள்வேன்” என்றார்.
|
32. And I G2504 , if G1437 I be lifted up G5312 from G1537 the G3588 earth G1093 , will draw G1670 all G3956 men unto G4314 me G1683 .
|
33. தான் எவ்வாறு இறந்துபோவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார். PEPS
|
33. G1161 This G5124 he said G3004 , signifying G4591 what G4169 death G2288 he should G3195 die G599 .
|
34. ஆனால் மக்களோ, “கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க ‘மனித குமாரன் உயர்த்தப்படுவார்’ என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த ‘மனித குமாரன்?’ ” எனக் கேட்டனர். PEPS
|
34. The G3588 people G3793 answered G611 him G846 , We G2249 have heard G191 out of G1537 the G3588 law G3551 that G3754 Christ G5547 abideth G3306 forever G1519 G165 : and G2532 how G4459 sayest G3004 thou G4771 , The G3588 Son G5207 of man G444 must G1163 be lifted up G5312 ? who G5101 is G2076 this G3778 Son G5207 of man G444 ?
|
35. பிறகு இயேசு, “இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போதுதான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்துபோகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும்.
|
35. Then G3767 Jesus G2424 said G2036 unto them G846 , Yet G2089 a little G3398 while G5550 is G2076 the G3588 light G5457 with G3326 you G5216 . Walk G4043 while G2193 ye have G2192 the G3588 light G5457 , lest G3363 darkness G4653 come upon G2638 you G5209 : for G2532 he that walketh G4043 in G1722 darkness G4653 knoweth G1492 not G3756 whither G4226 he goeth G5217 .
|
36. ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன்மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள்” என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக்கொண்டார். PS
|
36. While G2193 ye have G2192 light G5457 , believe G4100 in G1519 the G3588 light G5457 , that G2443 ye may be G1096 the children G5207 of light G5457 . These things G5023 spake G2980 Jesus G2424 , and G2532 departed G565 , and did hide G2928 himself from G575 them G846 .
|
37. {இயேசுவை நம்பாத யூதர்கள்} PS இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
|
37. But G1161 though he G846 had done G4160 so many G5118 miracles G4592 before G1715 them G846 , yet they believed G4100 not G3756 on G1519 him G846 :
|
38. தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது. “கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்? தேவனின் வல்லமையைக் கண்டுகொண்டவர்கள் யார்?” ஏசாயா 53:1
|
38. That G2443 the G3588 saying G3056 of Isaiah G2268 the G3588 prophet G4396 might be fulfilled G4137 , which G3739 he spake G2036 , Lord G2962 , who G5101 hath believed G4100 our G2257 report G189 ? and G2532 to whom G5101 hath the G3588 arm G1023 of the Lord G2962 been revealed G601 ?
|
39. இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும்,
|
39. Therefore G1223 G5124 they could G1410 not G3756 believe G4100 , because G3754 that Isaiah G2268 said G2036 again G3825 ,
|
40. “தேவன் மக்களைக் குருடாக்கினார். தேவன் அவர்களின் மனதை மூடினார். அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்கவேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார். அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன்.” ஏசாயா 6:10
|
40. He hath blinded G5186 their G846 eyes G3788 , and G2532 hardened G4456 their G846 heart G2588 ; that G2443 they should not G3361 see G1492 with their eyes G3788 , nor G2532 understand G3539 with their heart G2588 , and G2532 be converted G1994 , and G2532 I should heal G2390 them G846 .
|
41. இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார். PEPS
|
41. These things G5023 said G2036 Isaiah G2268 , when G3753 he saw G1492 his G846 glory G1391 , and G2532 spake G2980 of G4012 him G846 .
|
42. ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர்.
|
42. Nevertheless G3676 G3305 G2532 among G1537 the G3588 chief rulers G758 also G2532 many G4183 believed G4100 on G1519 him G846 ; but G235 because G1223 of the G3588 Pharisees G5330 they did not G3756 confess G3670 him, lest G3363 they should be G1096 put out of the synagogue G656 :
|
43. அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர். PS
|
43. For G1063 they loved G25 the G3588 praise G1391 of men G444 more G3123 than G2260 the G3588 praise G1391 of God G2316 .
|
44. {தீர்ப்பளிக்கும் வசனங்கள்} PS பிறகு இயேசு உரத்த குரலில், “என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான்.
|
44. G1161 Jesus G2424 cried G2896 and G2532 said G2036 , He that believeth G4100 on G1519 me G1691 , believeth G4100 not G3756 on G1519 me G1691 , but G235 on G1519 him that sent G3992 me G3165 .
|
45. என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான்.
|
45. And G2532 he that seeth G2334 me G1691 seeth G2334 him that sent G3992 me G3165 .
|
46. நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான். PEPS
|
46. I G1473 am come G2064 a light G5457 into G1519 the G3588 world G2889 , that G2443 whosoever G3956 believeth G4100 on G1519 me G1691 should not G3361 abide G3306 in G1722 darkness G4653 .
|
47. “நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை.
|
47. And G2532 if G1437 any man G5100 hear G191 my G3450 words G4487 , and G2532 believe G4100 not G3361 , I G1473 judge G2919 him G846 not G3756 : for G1063 I came G2064 not G3756 to G2443 judge G2919 the G3588 world G2889 , but G235 to G2443 save G4982 the G3588 world G2889 .
|
48. என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம்தீர்க்கும்.
|
48. He that rejecteth G114 me G1691 , and G2532 receiveth G2983 not G3361 my G3450 words G4487 , hath G2192 one that judgeth G2919 him G846 : the G3588 word G3056 that G3739 I have spoken G2980 , the same G1565 shall judge G2919 him G846 in G1722 the G3588 last G2078 day G2250 .
|
49. ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும்.
|
49. For G3754 I G1473 have not G3756 spoken G2980 of G1537 myself G1683 ; but G235 the Father G3962 which sent G3992 me G3165 , he G846 gave G1325 me G3427 a commandment G1785 , what G5101 I should say G2036 , and G2532 what G5101 I should speak G2980 .
|
50. என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன்” என்றார். PE
|
50. And G2532 I know G1492 that G3754 his G846 commandment G1785 is G2076 life G2222 everlasting G166 : whatsoever G3739 I G1473 speak G2980 therefore G3767 , even as G2531 the G3588 Father G3962 said G2046 unto me G3427 , so G3779 I speak G2980 .
|