|
|
1. {தேவன் ஆபிராமை அழைக்கிறார்} PS கர்த்தர் ஆபிராமிடம், “நீ உனது ஜனங்களையும், நாட்டையும், தந்தையின் குடும்பத்தையும்விட்டு வெளியேறி நான் காட்டும் நாட்டுக்குப் போ.
|
1. Now the LORD H3068 had said H559 unto H413 Abram H87 , Get thee out H1980 of thy country H4480 H776 , and from thy kindred H4480 H4138 , and from thy father's house H4480 H1004 H1 , unto H413 a land H776 that H834 I will show H7200 thee:
|
2. நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.
|
2. And I will make H6213 of thee a great H1419 nation H1471 , and I will bless H1288 thee , and make thy name great H1431 H8034 ; and thou shalt be H1961 a blessing H1293 :
|
3. உன்னை ஆசீர்வதிக்கிற ஜனங்களை நான் ஆசீர்வதிப்பேன். உன்னை சபிப்பவர்களை நான் சபிப்பேன். நான் உன் மூலம் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களையும் ஆசீர்வதிப்பேன்” என்றார். PS
|
3. And I will bless H1288 them that bless H1288 thee , and curse H779 him that curseth H7043 thee : and in thee shall all H3605 families H4940 of the earth H127 be blessed H1288 .
|
4. {ஆபிராம் கானானுக்குப் போகிறான்} PS எனவே, ஆபிராம் கர்த்தருக்குக் கீழ்ப் படிந்து ஆரானை விட்டுப் போனான். லோத்து அவனோடு சென்றான். அப்போது ஆபிராமுக்கு 75 வயது.
|
4. So Abram H87 departed H1980 , as H834 the LORD H3068 had spoken H1696 unto H413 him ; and Lot H3876 went H1980 with H854 him : and Abram H87 was seventy H7657 and five H2568 years H8141 old H1121 when he departed H3318 out of Haran H4480 H2771 .
|
5. ஆபிராம் ஆரானை விட்டு போகும்போது தன் மனைவி சாராயையும், தன் சகோதரனுடைய மகனான லோத்தையும், எல்லா அடிமைகளையும், ஆரானில் அவனுக்குச் சொந்தமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். அவர்கள் ஆரானை விட்டுக் கானானை நோக்கிப் பயணம் செய்தனர்.
|
5. And Abram H87 took H3947 H853 Sarai H8297 his wife H802 , and Lot H3876 his brother H251 's son H1121 , and all H3605 their substance H7399 that H834 they had gathered H7408 , and the souls H5315 that H834 they had gotten H6213 in Haran H2771 ; and they went forth H3318 to go H1980 into the land H776 of Canaan H3667 ; and into the land H776 of Canaan H3667 they came H935 .
|
6. ஆபிராம் கானான் தேசத்தின் வழியாகப் பயணம் செய்து சீகேம் நகரம் வழியே மோரேயில் இருக்கும் பெரிய மரங்கள் உள்ள இடத்திற்கு வந்தான். அக்காலத்தில் அங்கு கானானியர் வாழ்ந்தனர். PEPS
|
6. And Abram H87 passed through H5674 the land H776 unto H5704 the place H4725 of Sichem H7927 , unto H5704 the plain H436 of Moreh H4176 . And the Canaanite H3669 was then H227 in the land H776 .
|
7. கர்த்தர் ஆபிராமுக்குக் காட்சியளித்து, “நான் உன் சந்ததிக்கு இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்றார். PEPS கர்த்தர் காட்சியளித்த இடத்தில் ஆபிராம் கர்த்தரைத் தொழுகைசெய்ய ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
|
7. And the LORD H3068 appeared H7200 unto H413 Abram H87 , and said H559 , Unto thy seed H2233 will I give H5414 H853 this H2063 land H776 : and there H8033 built H1129 he an altar H4196 unto the LORD H3068 , who appeared H7200 unto H413 him.
|
8. பின் ஆபிராம் அந்த இடத்தை விட்டு பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போனான். அங்கு அவன் கூடாரம் போட்டான். பெத்தேல் நகரம் மேற்காக இருந்தது. ஆயீ நகரம் அதற்குக் கிழக்கே இருந்தது. அங்கு ஒரு பலிபீடத்தைக் கர்த்தருக்கு அமைத்து கர்த்தரைத் தொழுதுகொண்டான்.
|
8. And he removed H6275 from thence H4480 H8033 unto a mountain H2022 on the east H4480 H6924 of Bethel H1008 , and pitched H5186 his tent H168 , having Bethel H1008 on the west H4480 H3220 , and Hai H5857 on the east H4480 H6924 : and there H8033 he built H1129 an altar H4196 unto the LORD H3068 , and called H7121 upon the name H8034 of the LORD H3068 .
|
9. மீண்டும் ஆபிராம் பயணம் செய்து பாலைவனப் பகுதிக்குச் சென்றான். PS
|
9. And Abram H87 journeyed H5265 , going on H1980 still H5265 toward the south H5045 .
|
10. {எகிப்தில் ஆபிராம்} PS அந்நாட்களில் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் உணவுப் பொருட்களும் விளையாமல் இருந்தது. எனவே ஆபிராம் எகிப்திற்கு பிழைப்பதற்காகப் போனான்.
|
10. And there was H1961 a famine H7458 in the land H776 : and Abram H87 went down H3381 into Egypt H4714 to sojourn H1481 there H8033 ; for H3588 the famine H7458 was grievous H3515 in the land H776 .
|
11. தன் மனைவி சாராய் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று எண்ணிய அவன், எகிப்தை நெருங்குவதற்கு முன் சாராயிடம், “நீ வெகு அழகான பெண் என்பது எனக்குத் தெரியும்.
|
11. And it came to pass H1961 , when H834 he was come near H7126 to enter H935 into Egypt H4714 , that he said H559 unto H413 Sarai H8297 his wife H802 , Behold H2009 now H4994 , I know H3045 that H3588 thou H859 art a fair H3303 woman H802 to look upon H4758 :
|
12. எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள், ‘இவள் இவனுடைய மனைவி’ என்று பேசுவார்கள் பிறகு உன்னை அடைய விரும்பி என்னைக் கொன்றுவிடுவார்கள்.
|
12. Therefore it shall come to pass H1961 , when H3588 the Egyptians H4713 shall see H7200 thee , that they shall say H559 , This H2063 is his wife H802 : and they will kill H2026 me , but they will save thee alive H2421 .
|
13. அதனால் நான் அவர்களிடம் நீ என் சகோதரி என்று கூறுவேன். பிறகு அவர்கள் என்னைக் கொல்லமாட்டார்கள். நான் உன் சகோதரன் என்பதால் அவர்கள் என் மீது கருணையோடு இருப்பார்கள். இவ்வகையில் நீ என் உயிரைக் காப்பாற்றலாம்” என்றான். PEPS
|
13. Say H559 , I pray thee H4994 , thou H859 art my sister H269 : that H4616 it may be well H3190 with me for thy sake H5668 ; and my soul H5315 shall live H2421 because of H1558 thee.
|
14. எனவே ஆபிராம் எகிப்துக்குப் போனான். அங்குள்ள ஜனங்கள் சாராய் மிகவும் அழகானவளாக இருப்பதைப் பார்த்தனர்.
|
14. And it came to pass H1961 , that , when Abram H87 was come H935 into Egypt H4714 , the Egyptians H4713 beheld H7200 H853 the woman H802 that H3588 she H1931 was very H3966 fair H3303 .
|
15. சில எகிப்தின் தலைவர்களும் அவளைப் பார்த்தனர். அவள் மிகவும் அழகான பெண் என்று அவர்கள் பார்வோனிடம் கூறினர். அவர்கள் அவளைப் பார்வோனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
|
15. The princes H8269 also of Pharaoh H6547 saw H7200 her , and commended H1984 her before H413 Pharaoh H6547 : and the woman H802 was taken H3947 into Pharaoh H6547 's house H1004 .
|
16. ஆபிராமைச் சாராயின் சகோதரனாக எண்ணிப் பார்வோனும் ஆபிராமிடம் அன்பாக இருந்தான். பார்வோன் அவனுக்கு ஆடுகள், மாடுகள், பெண் வேலையாட்கள், கழுதைகள், ஒட்டகங்கள் என்று பலவற்றைக் கொடுத்தான். PEPS
|
16. And he entreated Abram well H3190 H87 for her sake H5668 : and he had H1961 sheep H6629 , and oxen H1241 , and he asses H2543 , and menservants H5650 , and maidservants H8198 , and she asses H860 , and camels H1581 .
|
17. பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார்.
|
17. And the LORD H3068 plagued H5060 H853 Pharaoh H6547 and his house H1004 with great H1419 plagues H5061 because of H5921 H1697 Sarai H8297 Abram H87 's wife H802 .
|
18. எனவே பார்வோன் ஆபிராமை அழைத்தான். அவன், “நீ எனக்கு மிகக் கெட்ட காரியத்தைச் செய்துள்ளாய்! சாராய் உன் மனைவி என்று சொல்லாமல்,
|
18. And Pharaoh H6547 called H7121 Abram H87 , and said H559 , What H4100 is this H2063 that thou hast done H6213 unto me? why H4100 didst thou not H3808 tell H5046 me that H3588 she H1931 was thy wife H802 ?
|
19. அவளை உன் சகோதரி என்று ஏன் சொன்னாய்? நான் அவளை எடுத்துக்கொண்டதால் அவள் எனது மனைவியாக இருந்திருப்பாளே. ஆனால் இப்பொழுது உன் மனைவியை உனக்கு நான் திரும்பிக் கொடுக்கிறேன். அவளை அழைத்துகொண்டு போய்விடு” என்றான்.
|
19. Why H4100 saidst H559 thou, She H1931 is my sister H269 ? so I might have taken H3947 her to me to wife H802 : now therefore H6258 behold H2009 thy wife H802 , take H3947 her , and go thy way H1980 .
|
20. பிறகு, பார்வோன் தன் வீரர்களிடம், ஆபிராமை நாட்டைவிட்டு வெளியே அனுப்புமாறு கட்டளையிட்டான். எனவே, ஆபிராமும் அவனது மனைவியும் அவர்களுக்குச் சொந்தமானவற்றை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். PE
|
20. And Pharaoh H6547 commanded H6680 his men H376 concerning H5921 him : and they sent him away H7971 H853 , and his wife H802 , and all H3605 that H834 he had.
|