Bible Versions
Bible Books

2 Samuel 13:5 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.
IRVTA   அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதியுள்ளனைப்போல உன்னுடைய படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்ப்பதற்கு உன்னுடைய தகப்பனார் வரும்போது, நீ என்னுடைய சகோதரியான தாமார் வந்து, எனக்கு உணவு கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படி நான் பார்க்க, என்னுடைய கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்து அவளை அனுப்பும் என்று சொல் என்றான்.
ERVTA   யோனதாப் அம்னோனை நோக்கி, "படுக்கைக்குப் போ. நோயுற்றவன் போல் நடி. உன் தந்தை உன்னைக் காணவருவார். அவரிடம், ‘எனது சகோதரியாகிய தாமார் வந்து எனக்கு உணவு தரட்டும். அவள் என் முன்னே உணவு சமைக்கட்டும். அப்போது அதை நான் பார்த்து அவள் கையால் புசிப்பேன்’ என்று சொல்" என்றான்.
RCTA   யோனதாப் அவனை நோக்கி, "நீ உன் படுக்கையில் படுத்துக்கொண்டு, நோயுற்றவனைப் போல் பாசாங்கு செய். உன் தந்தை உன்னைப் பார்க்க வரும் போது நீ அவரைப் பார்த்து: 'என் சகோதரி தாமார் எனக்கு உணவு கொடுத்து அவள் கையால் நான் சாப்பிடத்தக்க உணவு சமைத்துத் தரும்படி தாங்கள் தயவுசெய்து அவளை அனுப்பவேண்டும்' என்று சொல்" என்றான்.
ECTA   யோனத்தாபு அவனிடம், "உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர் போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும். என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன் எனச் சொல்லும் என்று யோனதாபு அவனுக்கு ஆலோசனைக் கூறினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us