|
|
1. இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும். நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர். கேருபீன்கள் மேல் அரசராக நீர் வீற்றிருக்கிறீர். நாங்கள் உம்மைப் பார்க்கட்டும்.
|
1. To the chief Musician H5329 upon H413 Shoshannim H7802 -eduth , A Psalm H4210 of Asaph H623 . Give ear H238 , O Shepherd H7462 of Israel H3478 , thou that leadest H5090 Joseph H3130 like a flock H6629 ; thou that dwellest H3427 between the cherubims H3742 , shine forth H3313 .
|
2. இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும். வந்து எங்களைக் காப்பாற்றும்.
|
2. Before H6440 Ephraim H669 and Benjamin H1144 and Manasseh H4519 stir up H5782 H853 thy strength H1369 , and come H1980 and save H3444 us.
|
3. தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
|
3. Turn us again H7725 , O God H430 , and cause thy face H6440 to shine H215 ; and we shall be saved H3467 .
|
4. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்? என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ?
|
4. O LORD H3068 God H430 of hosts H6635 , how long H5704 H4970 wilt thou be angry H6225 against the prayer H8605 of thy people H5971 ?
|
5. உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர். உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர். அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று.
|
5. Thou feedest H398 them with the bread H3899 of tears H1832 ; and givest them tears H1832 to drink H8248 in great measure H7991 .
|
6. எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர். எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள்.
|
6. Thou makest H7760 us a strife H4066 unto our neighbors H7934 : and our enemies H341 laugh H3932 among themselves.
|
7. சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும்.
|
7. Turn us again H7725 , O God H430 of hosts H6635 , and cause thy face H6440 to shine H215 ; and we shall be saved H3467 .
|
8. கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர். நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர். இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர். உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர்.
|
8. Thou hast brought H5265 a vine H1612 out of Egypt H4480 H4714 : thou hast cast out H1644 the heathen H1471 , and planted H5193 it.
|
9. “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர். அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர். உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது.
|
9. Thou preparedst H6437 room before H6440 it , and didst cause it to take deep root H8327 H8328 , and it filled H4390 the land H776 .
|
10. அது பர்வதங்களை மூடிற்று. அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன.
|
10. The hills H2022 were covered H3680 with the shadow H6738 of it , and the boughs H6057 thereof were like the goodly H410 cedars H730 .
|
11. அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது. அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது.
|
11. She sent out H7971 her boughs H7105 unto H5704 the sea H3220 , and her branches H3127 unto H413 the river H5104 .
|
12. தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்? இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.
|
12. Why H4100 hast thou then broken down H6555 her hedges H1447 , so that all H3605 they which pass by H5674 the way H1870 do pluck H717 her?
|
13. காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன. காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன.
|
13. The boar H2386 out of the wood H4480 H3293 doth waste H3765 it , and the wild beast H2123 of the field H7704 doth devour H7462 it.
|
14. சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும். பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.
|
14. Return H7725 , we beseech H4994 thee , O God H430 of hosts H6635 : look down H5027 from heaven H4480 H8064 , and behold H7200 , and visit H6485 this H2063 vine H1612 ;
|
15. தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும். நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும்.
|
15. And the vineyard H3657 which H834 thy right hand H3225 hath planted H5193 , and the branch H1121 that thou madest strong H553 for thyself.
|
16. உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது. நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர்.
|
16. It is burned H8313 with fire H784 , it is cut down H3683 : they perish H6 at the rebuke H4480 H1606 of thy countenance H6440 .
|
17. தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது மகனை நெருங்கும். நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும்.
|
17. Let thy hand H3027 be H1961 upon H5921 the man H376 of thy right hand H3225 , upon H5921 the son H1121 of man H120 whom thou madest strong H553 for thyself.
|
18. அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார். அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார்.
|
18. So will not H3808 we go back H5472 from H4480 thee: quicken H2421 us , and we will call H7121 upon thy name H8034 .
|
19. சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும். எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும். PE
|
19. Turn us again H7725 , O LORD H3068 God H430 of hosts H6635 , cause thy face H6440 to shine H215 ; and we shall be saved H3467 .
|